திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

தமிழ் தவிர அனைத்து மொழிகளிலும் புதிய கல்வி கொள்கை: ஸ்டாலின் கண்டனம்

மத்திய அரசு அறிவித்த புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் புதிய கல்விக் கொள்கையில் உள்ள ஷரத்துக்கள் அனைத்தும் புரிய வேண்டும் என்பதற்காக பிராந்திய மொழிகளில் புதிய கல்விக் கொள்கையை மொழிபெயர்த்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது
 
தெலுங்கு கன்னடம் மலையாளம் மராத்தி உள்பட 17 மொழிகளில் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் தமிழ் மொழியில் புதிய கல்விக்கொள்கை வெளியிடவில்லை என்பதால் தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்தியா மட்டுமின்றி உலகுக்கே முன்னோடியாக இருக்கும் தமிழ் மொழியில் புதிய கல்விக்கொள்கை வெளியிடாதது கொடூரமான செயல் என அரசியல் கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தமிழ் தவிர 17 மாநில மொழிகளில் புதிய கல்விக் கொள்கையை வெளியீட்டு பாஜக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையில் செயல்படுவதாக கூறியுள்ளார்.
 
ஆனால் அதே நேரத்தில் புதிய கல்விக் கொள்கையை பல அமைப்புகள் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து ஏற்கனவே இணைய தளங்களில் பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது