செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 22 ஜனவரி 2020 (07:26 IST)

இதை செய்திருந்தால் ரஜினியின் மதிப்பு இன்னும் உயர்ந்திருக்கும்: வைகோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் விழாவில் பேசிய பேச்சும் அதன் பின்னர் பெரியார் குறித்து தவறாக ஏதும் பேசவில்லை என்பதால் மன்னிப்பு கேட்க முடியாது என்று அளித்த பேட்டியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் இது குறித்து கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்த நிலையில் தற்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சென்னை விமான நிலையத்தில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்தார் 
 
இந்தியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோவால் புகழப்பட்ட பெரிய தந்தை பெரியார் குறித்து அறிந்து கொள்ள வடமாநில இளைஞர்கள் தற்போது விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அந்த அளவுக்கு புகழ் பெற்ற பெரியார் குறித்து ரஜினிகாந்த் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தவறு. அப்படியே பேசி இருந்தாலும் அதற்காக அவர் வருத்தம் தெரிவித்த இந்த வேண்டும். அவ்வாறு அவர் வருத்தம் தெரிவித்து இருந்தால் அவரது மதிப்பு இன்னும் பலமடங்கு உயர்ந்திருக்கும்
 
தற்போதும் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் அவர்கள் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் தான். இருப்பினும் அவர் பெரியார் குறித்து பேசிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்து இருந்தால் நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என்று கூறியுள்ளார். வைகோவின் இந்த வேண்டுகோளை அடுத்து ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்