அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கி இருந்த நிலையில் பாமகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. நேற்று வெளியான 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் ஜிகே மணி உள்பட ஒரு சில வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியானது என்பதை பார்த்தோம் இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி மேலும் 10 வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் பொன்னகரம், ஆத்தூர், கீழ்பெண்ணாத்தூர், திருப்போரூர், ஜெயம்கொண்டான், ஆற்காடு, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் மேற்கு, செஞ்சி ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் மயிலாடுதுறை, விருத்தாச்சலம், சேப்பாக்கம், நெய்வேலி, கும்முடிபூண்டி, சோளிங்கர், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் மைலம் ஆகிய தொகுதிகள் குறிப்பிடத்தக்கது இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள பாமகவின் 19 வேட்பாளர்களின் முழு பட்டியல் இதோ: பென்னாகரகம் – ஜி.கே.மணி தருமபுரி – வெங்கடேசன் திருப்பத்தூர் – டி.கே.ராஜா சேலம் மேற்கு – அருள் கீழ்பென்னாத்தூர் – செல்வகுமார் திருப்போரூர் – திருக்கச்சூர் ஆறுமுகம் ஜெயங்கொண்டம் –வழக்கறிஞர் பாலு ஆற்காடு – இளவழகன் செஞ்சி –ராஜேந்திரன் திண்டுக்கல் –திலகபாமா மயிலாடுதுறை - சித்தமல்லி பழனிச்சாமி விருத்தாசலம்- ஜே கார்த்திகேயன் சேப்பாக்கம்- கஸ்ஸாலி நெய்வேலி- ஜெகன் கும்மிடிபூண்டி: பிரகாஷ்; சோளிங்கர்- அ.ம.கிருஷ்ணன் கீழ்வேளூர்- வேத. முகுந்தன் காஞ்சிபுரம்- பெ. மகேஷ்குமார் மைலம்- சிவக்குமார்