தொடர்புடைய செய்திகள்
- அதிமுக அரசு விளம்பரத்திற்கு ரூ.1000 கோடி செலவு - கனிமொழி எம்.பி
- அரசு விழாவா இது... அதிமுகவை சாடிய கருணாஸ்!
- கூட்டணி பத்தி என்கிட்ட கேக்காதீங்க.. அதிமுககிட்ட கேளுங்க! – பிரேமலதா விஜயகாந்த்!
- அதிமுக அலுவலகத்திற்கு சசிகலா வர வாய்ப்பு இல்லை - அமைச்சர் ஜெயகுமார்
- எப்போ எப்படினு தெரியாது... பேக் அடிக்கும் டிடிவி?
சசிகலா வருகை எப்படி இருக்கும்... வைகோ ஆருடம் பளிக்குமா?
சசிகலாவின் வருகை பெறும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பலர் கூறி வரும் நிலையில் இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா சமீபத்தில் விடுதலை ஆன நிலையில் அவர் சென்னை திரும்பியுள்ளார். சசிகலாவின் வருகை தமிழகத்தில் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பல தரப்பினர் கூறி வரும் நிலையில் இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, தேர்தல் முடிவுகள் வெற்றி சூரியனைப் போல் பிரகாசமாக இருக்கிறது. திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். முறையான திட்டங்களை வகுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை சந்தித்து வருகிறார்.
மக்கள் மனதில் இந்த அரசு அகற்றப்பட வேண்டும் என்ற முடிவு இருக்கிறது. காங்கிரஸ் கட்சி தலைமையில் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இல்லை. சிறையில் இருந்து வந்து இருக்கும் சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆளுங்கட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார்.
