1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: ஞாயிறு, 17 நவம்பர் 2019 (15:18 IST)

”இன்று வரலாற்றில் மிகவும் மோசமான நாள்” .. வைகோ ஆவேசம்

இலங்கை அதிபராக கோத்தப்பய ராஜபக்‌ஷே தேர்வு செய்யப்பட்ட நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ “இன்று இலங்கை வரலாற்றில் மோசமாக நாள்” என கூறியுள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன முன்னணி கட்சி வேட்பாளர் கோத்தப்பய ராஜபக்‌ஷே , தன்னை எதிர்த்து போட்டியிட்ட புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “கோத்தப்பய ராஜபக்‌ஷே வெற்றி பெற்ற இந்த நாள் இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள்” என கூறியுள்ளார்.

கோத்தப்பய ராஜபக்‌ஷே, இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்‌ஷேவின் சகோதரர். மஹிந்த ராஜபக்‌ஷே ஆட்சியில் இருந்தபோது தான் இலங்கை தமிழர்கள் இனப் படுகொலை நடைபெற்றது. மேலும் ராஜபக்‌ஷே ஒரு போர் குற்றவாளி என பலர் கண்டனம் தெரிவித்து வந்தவர்களில் வைகோவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.