வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 5 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 5 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!
தேனி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக வைகை அணையில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளன
நேற்று இரவு தேனி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்
அதேபோல் மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது . எனவே காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது