திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (19:26 IST)

காவிரியில் 2 லட்சம் கன அடி நீரை திறந்துவிட்ட கர்நாடகா: தமிழக மக்களுக்கு எச்சரிக்கை

Cauvery
காவிரியில் வினாடிக்கு இரண்டு லட்சம் கன அடி நீர் தண்ணீர் தண்ணீரை கர்நாடக மாநில அரசு திறந்து விட்டதால் தமிழக காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
கர்நாடகாவில் உள்ள கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 2.12 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளன
 
2 லட்சம் கன அடிக்கு மேல் காவிரியில் நீர் வருவதால் தமிழக கரையோர மக்களின் பாதுகாப்பு குறித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
கேஎஸ்ஆர் கபினி அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நாளை மேட்டூர் அணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது