திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (09:46 IST)

மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Flood
கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் ஒரு சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் சற்று முன் மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மதுரை வைகை ஆற்றில் இறங்கி வெள்ளத்தின் நடுவில் நின்றுகொண்டு செல்பி எடுக்க கூடாது என்றும் அதேபோல் பெண்கள் துணி துவைக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மதுரை வைகை ஆற்றின் கரையோர பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.