வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (10:32 IST)

மீண்டும் தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

vaccine
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த நிலையில் தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது 
 
இதனை அடுத்து தமிழகத்தில் மீண்டும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரிப்பு காரணமாக மே 8ஆம் தேதி முதல் மீண்டும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் இரண்டாம் தாள் செலுத்தாதவர்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக்கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.