வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (13:06 IST)

ஏன் வாக்களிக்க வேண்டும்? ; யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

The Ballot is stronger than the Bullet – Abraham Lincoln

வரலாற்றின் பக்கங்களில் யாருக்கும் அடங்கிப் போகாமல் கிளர்ந்து எழுந்த ஒரு இனம் ! இங்கு இருளில் மங்கிப்போன ஜனநாயகத்திற்கு ஒளியை ஏற்றும் திருவிழாவை தொடங்கியிருக்கிறது.



யார் சொன்னது ஐய்யனாரும், கருப்பச்சுவாமியும் மட்டுமே காவல் தெய்வங்கள் என்று,
பளப்பளக்கும் புதிய அவதாரங்கள் !
மிரட்டும் கண்கள் !
நன்மையும் தீமையும் நம் நாட்டம் !
தேசம் காக்க, ஓட்டு சாவடிக்களை நோக்கி
புறப்படும் அனைவரும் ஐய்யனார்களே ! கருப்பச்சுவாமிகளே !

இங்கு அரசை விமர்ச்சித்தால் சமூக விரோதி, தேசத் துரோகி என்று பட்டங்கள் தரப்படுக்கிறது. இங்கு அரசுக்கு எதிராக எழுதினால் மரணம் பரிசாக தரப்படுக்கிறது. மாவீரனுக்கு ஏது மரணம் ?

உண்மையில் இந்த தமிழ் சமூகத்தில் சாதிகள் இல்லை ! மதங்கள் இல்லை ! இது அனைவருக்குமான ஒரு சமூகம். சாதிகள், மதங்களை கொண்டு நம்மை அணுகுவோருக்கு எதிராக வாக்களிப்போம்.

மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று கொல்லப்பட்ட அத்துணை அத்லக்களையும் ஒரு நிமிடம் மனதிற்க் கொண்டு வாக்களிப்போம் ! குறிப்பாக மேனகா காந்தி போன்ற நவீன பால்தாக்ரேக்களை புறக்கணிக்கப்போம் !

சிலரது கவலைகள் கண்ணீர் ஆகலாம் !
சிலரது கவலைகள் கவிதை ஆகலாம் !
சிலரது கவலைகள் காவியங்கள் ஆகலாம் !
காலங்கள் மாறி
கோலங்கள் மாறி
கால்கள் மாறி
இங்கு ஜனநாயகத்தின் கண்ணீர் பணக்குவியல் ஆகி விட்டது !

 

நம்மை சில ஆயிரங்களில் விலைக்கு வாங்க நினைக்கும் பணப்பேய்களுக்கு எதிராக வாக்களிப்போம் ! நாம் பிச்சைக்காரர்கள் இல்லை. நம் ஓட்டு ! நம் உரிமை !

நீட் என்னும் அரக்கனை சம்காரம் செய்யும் சூரனாய் நம் வாக்குகளை பதிவு செய்வோம் ! நம் சகோதரி அனிதாவை நினைவில் கொள்வோம் !

நாம், நம் குடும்ப விழாக்களில் யாரை
அழைக்க வேண்டும்
என்பதை விட
நாம் யாரை
அழைக்கக் கூடாது என்பதை பெரும் கருத்தில் கொள்வதைப் போல
இந்த ஜன நாயகத் திருவிழாவில்
நாம், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட
யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதை பெரும் கருத்தில் கொள்வோம் !

Voting is not only our right – It is our power


இரா.காஜா பந்தா நவாஸ்
[email protected]