திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 ஜனவரி 2022 (12:48 IST)

லாட்டரி சீட்டுக்கு ரூ.3500 கோடி பரிசு; தலைமறைவான அதிர்ஷ்டசாலி! – அமெரிக்காவில் ஆச்சர்யம்!

அமெரிக்காவில் ஒருவருக்கு லாட்டரியில் ரூ.3500 கோடி பரிசு விழுந்துள்ள நிலையில் அந்த நபர் தலைமறைவாகியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு நாடுகளில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படும் நிலையில் மக்களுக்கு லாட்டரி மீது மோகமும் தொடர்ந்து வருகிறது. அதிர்ஷ்டமாக சிலருக்கு திடீரென பெரும் தொகை லாட்டரியில் கிடைக்கும் சம்பவங்களும் நடக்கும். அப்படியான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் தெற்கு கலிபொர்னியா பகுதியில் விற்கப்பட்ட லாட்டரி ஒன்றிற்கு ரூபாய் மதிப்பில் 3,500 கோடி பரிசு விழுந்துள்ளது. இந்த லாட்டரி சீட்டை வாங்கிய நபர் யார் என்று தெரியவில்லை. அவர் லாட்டரி அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளவில்லை. பரிசு விழுந்தவர் அந்த தொகையை பெற்றுக் கொள்ள ஒரு வருட காலம் அவகாசம் உள்ளதாக லாட்டரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பரிசுத்தொகையில் 40 சதவீதம், அதாவது சுமார் 1,400 கோடியை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டி இருக்கும் என லாட்டரித்துறை தெரிவித்துள்ளது.