திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: ஞாயிறு, 5 ஜனவரி 2020 (14:14 IST)

ஈராக்கிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை !

ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையத்தில் நேற்று காலை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின்படி தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தாக்குதலில் ஈராக் ராணுவத்தின் தளபதி உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளதால் ஈராக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், அமெரிக்க நிலையில் மற்றும் அமெரிக்கர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினால் ஈரானில் உள்ள பழமையான கலாச்சாரம் முக்கியதுவம் உள்ள இடங்கள் அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஈராக்கிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஈரான் கைப்பற்றியதால் அமெரிக்க தூதரகம் அருகே பெரிய அளவில் அமெரிக்க ராணுவ படைகள் குவிக்கப்பட்ட நிலையில் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் ஆரம்பிக்கலாம் என கருதப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவுப்படி டிரோன் விமானங்கள் மூலம் அமெரிக்க படைகள் தொடர்ந்து ஈரான் தலைவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது ஈரான் ராணுவ தளபதி குஸ்ஸம் சுலைமானி சென்ற ஹெலிகாப்டரையும் தாக்கியுள்ளது அமெரிக்கா. அவருடன் ராணுவ கமாண்டர் அப் மஹ்தி அல் முஹாண்டிஸும் கொல்லப்பட்டுள்ளார். இது உலகளவிலான போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் ஜெனரல் சுலைமாணி கொல்லப்பட்டதற்கு ஈரான் ஆதரவாளர்கள் இரங்கல் தெரிவித்து பேரணியாக செல்ல இருந்த சமயத்தில் மீண்டும் வான்வெளி தாக்குதல் நடந்துள்ளது. இந்த வான்வழி தாக்குதல் அமெரிக்காவால் நடத்தப்பட்டதாக ஈராக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் அமெரிக்க அதிகாரப்பூர்வமாக இன்னும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
 
இந்நிலையில், அமெரிக்க நிலையில் மற்றும் அமெரிக்கர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினால் ஈரானில் உள்ள பழமையான கலாச்சாரம் முக்கியதுவம் உள்ள இடங்கள் அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஈராக்கிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
நேற்று, இரவு ஈராகில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்கர்கள்  வசிக்கும் பலாட் விமான படைதளம் , அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கிரீன் ஜோன் ஆகியவை குறிவைத்து ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
 
இந்த தாக்குதலை யார் நடத்தினார்கள் என்று தெரியவில்லை; ஆனால் ஈராக்கில் உள்ள பயங்கரவாதிகள் நடத்தியிருக்கலாம் என தகவல் வெளியாகிறது.
 
இந்நிலையில், 1972 ஆம் ஆண்டு அமெரிக்கர்கள் 72 பேரை ஈராக் சிறைவைக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டிய டிரம்ப், அதே எண்ணிக்கையில் இராக்கில் உள்ள கலாச்சாரம் கலைஇடங்களை பழமையான இடங்கள் அழிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.