திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 4 ஜனவரி 2020 (09:14 IST)

ஈராக்கில் மீண்டும் தாக்குதல்: அமெரிக்காவால் உலக நாடுகள் கவலை!

ஈரான் அதிபர் கொல்லப்பட்ட தாக்குதலை நடத்திய அமெரிக்க மீண்டும் ஈராக் மீது தாக்குதலை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையத்தில் நேற்று காலை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின்படி தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தாக்குதலில் ஈராக் ராணுவத்தின் தளபதி உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளதால் ஈராக்கில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

சமீபத்தில் ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஈரான் கைப்பற்றியதால் அமெரிக்க தூதரகம் அருகே பெரிய அளவில் அமெரிக்க ராணுவ படைகள் குவிக்கப்பட்ட நிலையில் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் ஆரம்பிக்கலாம் என கருதப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவுப்படி டிரோன் விமானங்கள் மூலம் அமெரிக்க படைகள் தொடர்ந்து ஈரான் தலைவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது ஈரான் ராணுவ தளபதி குஸ்ஸம் சுலைமானி சென்ற ஹெலிகாப்டரையும் தாக்கியுள்ளது அமெரிக்கா. அவருடன் ராணுவ கமாண்டர் அப் மஹ்தி அல் முஹாண்டிஸும் கொல்லப்பட்டுள்ளார். இது உலகளவிலான போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஜெனரல் சுலைமாணி கொல்லப்பட்டதற்கு ஈரான் ஆதரவாளர்கள் இரங்கல் தெரிவித்து பேரணியாக செல்ல இருந்த சமயத்தில் மீண்டும் வான்வெளி தாக்குதல் நடந்துள்ளது. இந்த வான்வழி தாக்குதல் அமெரிக்காவால் நடத்தப்பட்டதாக ஈராக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் அமெரிக்க அதிகாரப்பூர்வமாக இன்னும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.