புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 18 மே 2021 (10:01 IST)

இஸ்ரேலில் முடியா யுத்தம்; ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா ஒப்புதல்!

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் உச்சம் தொட்டுள்ள நிலையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு உள்ள நிலையில் கடந்த சில வாரங்கள் முன்னதாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா முனையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் புரட்சியாளர்கள் இடையேயும் கடும் யுத்தம் மூண்டுள்ளது.

இதனால் இரு தரப்பிலும் உயிர் இழப்புகள் நிகழ்ந்துள்ள நிலையில் போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேல் போரை நிறுத்தி கொள்வதாக இல்லை என அதன் பிரதமர் நேதன்யாகு கூறியிருந்தார்.

இந்நிலையில் இஸ்ரேல் அமெரிக்காவிடம் ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தம் செய்துக் கொண்டுள்ளது. அதன்படி இஸ்ரேலுக்கு 735 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க ஜோ பிடன் தலைமையிலான அமெரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.