1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. special pooja in viswakarma vinayagar temple

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை

viswakarma vinayagar temple
கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதூர்த்தி நிகழ்ச்சியை முன்னிட்டு மஹா தீபாராதனை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.



கரூர் நகரின் மையப்பகுதியில் தேர்வீதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதூர்த்தியை முன்னிட்டு, ஆலயத்தில் உள்ள பரிவார தெய்வங்களான விஷ்ணு துர்க்கை, விஸ்வகர்மா மற்றும் உற்சவர் விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆகிய தெய்வங்களுக்கும், மூலவர் விநாயகருக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், கற்பூர ஆரத்தி, கோபுர ஆரத்தி, நட்சத்திர ஆரத்திகளை தொடர்ந்து மஹா தீபாராதனையும் விஸ்வகர்மா சித்தி விநாயகருக்கு காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விநாயகர் அருள் பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை ஆலய ஸ்தானிக்கர் வசந்த் சர்மா மற்றும் கோயில் நிர்வாகத்தினரும், கட்டளைதாரர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
About Writer
ஆனந்தகுமார்
அடுத்த கட்டுரையில்
இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (19-10-2019)!