செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2019 (21:20 IST)

தென்னிந்திய அளவிலான ஜூடோ போட்டி ! கரூர் பரணி வித்யாலாயா பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப்

தென்னிந்திய அளவிலான ஜூடோ போட்டி ! கரூர் பரணி வித்யாலாயா பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் வென்று 9 வது முறையாக சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

தென்னிந்திய அளவிலான ஜூடோ விளையாட்டு போட்டி தெலுங்கானா மாநிலம், கரீம் நகர், விவேகானந்தர் பள்ளியில் கடந்த சில தினங்களாக நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகம், பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையேயான ஜூடோ போட்டியில் கரூர் பரணி பார்க் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் பட்டம் 20 தங்கப்பதக்கங்களும், 14 வெள்ளி பதக்கங்களும், 6 வெண்கலப்பதக்கங்களும் வென்று சாதனை பிடித்தது. இந்த வெற்றி தேசிய சாதனையும் கூட, இந்நிலையில் இன்று கரூர் பரணி வித்யாலாயா  பள்ளிக்கு வந்த அந்த வீரர், வீராங்கனைகளை பரணி வித்யாலயா பள்ளிக்குழுமம் சார்பில் வரவேற்கப்பட்டதோடு, அவர்களை கெளரவித்தனர். தொடர்ந்து 8 முறையும் வென்ற இந்த பரணி வித்யாலாயா பள்ளி, இந்த முறை 9 வது முறையாகவும் பதக்கங்கள் வென்றதாகவும், தொடர்ந்து தென்னிந்திய அளவில் வெற்றி பெற்றதன் மூலம் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்ற 34 நபர்களும் தேசிய விளையாட்டு போட்டியில் நவம்பர் மாதம் இறுதியில் உத்திரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியில் விளையாட உள்ளதாகவும், மேலும், தமிழகத்திற்கு பெருமை சேர்த்த அம்மாணவிகளை தமிழக ஜூடோ சங்க துணை தலைவரும், கரூர் பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதன்மை முதல்வருமான முனைவர் ராமசுப்பிரமணியன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.