திங்கள், 17 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 மார்ச் 2025 (13:31 IST)

அமைச்சர்கள் பெரிய கருப்பன், எஸ்.எஸ்.சிவசங்கர் மீதான வழக்குகள்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

highcourt
தமிழ்நாடு அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் எஸ்.எஸ்.சிவசங்கர் மீது பதிவான வழக்குகளை ரத்து செய்யும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

2018ஆம் ஆண்டு அனுமதி இல்லாமல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக, அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட சிலருக்கு எதிராக அரியலூர் போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்திருந்தனர்.

கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பிரசாரம் செய்ததாக, அமைச்சர் சிவசங்கர் மீது தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதேபோல், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தேர்தல் விதிகளை மீறியதாக, அமைச்சர் பெரிய கருப்பன் மீது சிவகங்கை மாவட்டம் கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி, அமைச்சர் சிவசங்கர் மற்றும் அமைச்சர் பெரிய கருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை பரிசீலித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இருவரின் மீதான வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட்டார்.

Edited by Mahendran