வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (13:05 IST)

முதல்வரின் அசத்தல் அறிவிப்புகள் - பேரவை அப்டேட்ஸ்!!

சத்துணவுச் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது உயர்த்தப்படுவதாக அறிவிப்பு. 
 
சட்டசபையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 வது விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.  அதில், சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவுச் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படும் என அறிவித்தார்.
 
முதல்வரின் இந்த அறிவிப்பின் மூலம் தற்போது பணியிலிருக்கும் 29 ஆயிரத்து 137 சமையலர்களும், 24 ஆயிரத்து 576 சமையல் உதவியாளர்களும் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்றைய சட்டமன்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் என கூறியுள்ளார்.
 
அதோடு விநாயகர் சிலைகளை செய்து வரும் 3000 பேருக்கு ரூ.10,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.