முதல்வரை சீண்டி பார்ப்பதா? பாலகிருஷ்ணனுக்கு திமுக கண்டனம்..!
சமீபத்தில் விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநாடு நடந்தபோது, அதில் பேசிய மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் ஆகிய்வற்றுக்கு திமுக அரசு தடை போடுகிறது என்றும், தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினார்.
போராட்டத்தை கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் என்னவென்றும், ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்துவிட்டு, கைது செய்து விட்டால், முடக்கி விட முடியுமா என்றும் அவர் ஆவேசமாக பேசினார்.
அவரது இந்த கருத்துக்கு பதில் அளித்த திமுக அமைச்சர் சேகர்பாபு, நேற்று வரை ஆட்சியை பாராட்டியவர், இன்று அவருக்கு என்ன நெருடல் என்று தெரியவில்லை. அவர் எந்த கண்ணோட்டத்தில் பேசுகிறாரோ என்பது தெரியவில்லை. குற்றம் சாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் குறை சொன்னால், அதற்கெல்லாம் பதில் தர முடியாது என்று கூறினார்.
இந்த நிலையில், திமுக நாளேடு முரசொலியில் கே. பாலகிருஷ்ணனுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்திற்கு தீனி போட தொடங்கி இருக்கிறார் பாலகிருஷ்ணன் என்றும், போராட்டங்களை நடத்தி விட்டு அனுமதி அளிக்கவில்லை என்று கூறுவது அரசியல் அறமல்ல என்றும், பாலகிருஷ்ணன் பேச்சு கூட்டணிக்கு அறம் இல்லை, மனசாட்சிக்கும் அறம் இல்லை எல்லாம் என்றும் முதல்வரை சீண்டி பார்க்க வேண்டாம் என்றும் கூறியுள்ளது.
Edited by Siva