நாளை கூடுகிறது சட்டசபை கூட்டம்.. கவர்னர் உரையாற்றுகிறார்..!
2025 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், நாளைய கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுவார் என்றும், மற்ற விவாதங்கள் ஏதும் நாளைய கூட்டத்தில் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
கவர்னர் உரையாற்றுவதற்கான அரசின் கொள்கை சார்ந்த குறிப்புகள் ஏற்கனவே கவர்னரிடம் வழங்கப்பட்டதாகவும், கவர்னர் உரையாற்ற முறைப்படி சபாநாயகர் அவருக்கு நேரில் சென்று அழைப்பு விடுப்பு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு தயாரித்த இந்த உரையில், தமிழக அரசின் செயல்பாடுகள், சாதனை விவரங்கள் மற்றும் கொள்கை சார்ந்த முடிவுகள் ஆகிய விவரங்கள் இடம் பெற்றதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு, கவர்னர் , அரசின் உரையை முழுமையாக வாசிக்காமல், முதல் பக்கத்தையும் கடைசி பக்கத்தையும் மட்டும் வாசித்து விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அவர் இந்த ஆண்டு முழுமையாக உரையை வாசிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Siva