1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 ஜூலை 2021 (21:45 IST)

முக ஸ்டாலினின் பெருமைமிகு தொண்டன் நான்: டாக்டர் மகேந்திரன் டுவிட்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன் சமீபத்தில் கட்சியில் இருந்து விலகினார் என்பது தெரிந்தது 
 
இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திமுகவில் டாக்டர் மகேந்திரன் தன்னை இணைத்துக் கொண்டார். அவரை வாழ்த்தி திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் அவர்கள் வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திமுகவில் இணைந்த பிறகு அவர் டாக்டர் மகேந்திரன் தனது டுவிட்டரில் கூறியபோது திமுக தலைவரின் தொண்டனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் பெரியாரின் சுயமரியாதை சித்தாந்தங்களையும், அண்ணாவின் மாபெரும் தமிழ்க்கனவையும் தொடர்ந்து சுமந்து சென்ற சுயமரியாதை சூரியன் கலைஞர் அவர்களின் பாதையில், கழகத்தலைவரும், தமிழக முதல்வருமான மாண்புமிகு திரு. ஸ்டாலின்  அவர்களின் தலைமையில்... இனி பெருமையுடன் தொண்டனாக நானும்.. என்று குறிப்பிட்டுள்ளார்.