1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MNM Mahendran tomorrow join DMK

நாளை திமுகவில் இணைகிறார் மநீம மகேந்திரன்!?

Mahendran
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய மகேந்திரன் நாளை திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வியை தழுவிய நிலையில் மநீம கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்த பலர் கட்சியிலிருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது. மநீம கட்சியின் டாக்டர் மகேந்திரனும் கட்சியிலிருந்து விலகிய நிலையில் அவர் திமுகவில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் டாக்டர் மகேந்திரன் நாளை மாலை 5 மணியளவில் அறிவாலயத்தில் திமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த கட்டுரையில்
உலக சாக்லேட் தினம்: சாக்லேட் பிரியரா நீங்கள்? இதை கண்டிப்பாக படியுங்கள்