வருகிறது புதிய கல்விக் கொள்கை; உயர் கல்வி நிறுவனங்களுக்கு யூஜிசி உத்தரவு!
தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த எதிர்ப்புகள் உள்ள நிலையில் புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவுகளை யூஜிசி வெளியிட்டுள்ளது.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் எதிர்கட்சிகள் பேசி வருகின்றன. மேலும் தமிழகத்தில் மும்மொழி கல்வி கொள்கை கொண்டு வர முடியாது என்று தமிழக அரசும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பணிகளில் யூஜிசி ஈடுபட்டுள்ளது. அதன்படி உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ள யூஜிசி தேசிய கல்வி கொள்கை மாற்றங்களுக்கு ஏற்றார்போல் கல்வியகங்களில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
அதை தொடர்ந்து அடுத்ததாக பள்ளி கல்வி முறைக்கான உத்தரவுகளும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.