ராணுவ விமான பாதையில் பயணிகள் விமானங்களுக்கு அனுமதி! – மத்திய அரசு முடிவு!
இந்திய வான்வெளியில் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள வான்வழி பாதைகளை பயணிகள் விமான சேவைகளுக்கு திறந்துவிட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இந்திய வான்வெளியில் பயணிகள் விமானம், தனியார் சுமைதாங்கி விமான சேவைகளுக்கு 60 சதவீதம் வான்வழி பாதைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மீத 40 சதவீத பகுதிகள் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்திய விமானப்படை விமானங்கள் பறப்பதற்கு மட்டுமே அந்த பாதைகளில் அனுமதி உண்டு.
இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக பயணிகள் விமான சேவைகள் மற்றும் நிறுவனங்கள் முடக்கம் கண்டுள்ளதால், ராணுவத்திற்கு உட்பட்ட விமான பாதையில் 10 சதவீதத்தை பயணிகள் விமானங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் பயணிகள் விமான போக்குவரத்து சுலபமாகும் என்பதோடு விமான நிறுவனங்களுக்கான எரிபொருள் செலவும், பயணிகளுக்கு டிக்கெட் செலவும் குறையும் என்று கூறப்பட்டுள்ளது.