டாஸ்மாக்கில் இனிமே எல்லா பிராண்டும் கிடைக்கும்!... சம பங்கீடு முறை ரத்து!..
தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றவுடன் டாஸ்மாக் நிர்வாகத்தில் இருக்கும் பல குளறுபடிகள் சரி செய்யப்பட்டு வருகிறது. முதலில் பொது மக்களுக்கு தொந்தரவு கொடுத்த, பிரச்சினையாக இருந்த 707 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. அதேபோல் பாட்டிலுக்கு கூடுதலாக ரு.10 வாங்க கூடாது என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தற்போது பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் 10 ரூபாய் வாங்கப்படவில்லை என குடிமகன்கள் சொல்கிறார்கள். ஒருபக்கம் தாங்கள் கேட்கும் பிராண்டுகளை டாஸ்மாக் ஊழியர்கள் கொடுப்பதில்லை மதுப்பிரியர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இந்நிலையில்தான் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசு ‘ டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளுக்கு சரக்கு அனுப்பும் நடைமுறையில் மாற்றம் செய்திருக்கிறது. செப்டம்பர் 21ம் தேதி முதல் ஒவ்வொரு கடைக்கும் உண்மையான தேவை மற்றும் கோரிக்கையின் அடிப்படையில் மட்டுமே சரக்குகளை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த அனைத்து சப்ளையர்களின் சரக்குகளையும் சமமாக பிரித்து வழங்கும் சம பங்கீடு முறை ரத்து செய்யப்பட்டிருக்கிறது..
இதன்மூலம் விற்பனையாகாமல் தேங்கும் சரக்குகள் குறைவதுடன் அதிகம் விற்பனையாகும் பிராண்டுகள் தேவைக்கேற்ப கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த செய்தி மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
இதன்மூலம் விற்பனையாகாமல் தேங்கும் சரக்குகள் குறைவதுடன் அதிகம் விற்பனையாகும் பிராண்டுகள் தேவைக்கேற்ப கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த செய்தி மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

