1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 ஜூன் 2020 (14:19 IST)

கொரோனா காலத்திலாவது செயல்படுங்கள் எடப்பாடியாரே! – கலாய்த்த உதயநிதி!

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இறப்பு குறித்து தமிழக அரசு பொய்யான தகவல்களை தருவதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசு இறப்பு விகிதத்தை குறைத்து காட்டுவதாகவும், மருத்துவமனைகளில் இறப்பு விகிதங்கள் தாமதமாக பதிவு செய்யப்படுவதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி ”இறப்பு விகிதத்தில் அரசு குறைத்து சொல்லவில்லை. குறைத்து சொல்வதால் அரசுக்கு எந்த பயனும் ” என்று விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் “கட்சிக்குள் அதிகாரப் போட்டி, ஆட்சியில் கமிஷன் போட்டி, மத்திய அரசிடம் மண்டியிடும் அடிமை போட்டி... இதனால் கொரோனா தடுப்புப் பணிகள் வெறும் மீடியா பேட்டிகள், அறிக்கைகளில் மட்டுமே நடக்கின்றன. கொரோனா காலத்திலாவது செயல்படுங்கள் முதலமைச்சர் அவர்களே” என பதிவிட்டுள்ளார்.

கொரோனா பரவலால் தமிழகம் முழுவதும் பதட்டம் நிலவும் சூழலில் கட்சிகளிடையேயான வார்த்தை மோதல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.