செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 ஜூலை 2025 (15:30 IST)

ஆகஸ்ட் 1 முதல் டிஜிட்டல் பரிவர்த்தனை பயனர்களுக்கு புதிய வசதி.. இனி பார்த்து பார்த்து செலவு செய்யலாம்..!

ஆகஸ்ட் 1 முதல் டிஜிட்டல் பரிவர்த்தனை பயனர்களுக்கு புதிய வசதி.. இனி பார்த்து பார்த்து செலவு செய்யலாம்..!
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பணம் என்ற கோட்பாட்டையே மாற்றி, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கோலோச்சி வருகின்றன. இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள், ஒரு வரப்பிரசாதமாகவும், அதே நேரத்தில் சில சவால்களையும் கொண்டுள்ளன. 
 
ஒரு காலத்தில், கையில் பணத்தை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு ரூபாயையும் எண்ணி செலவழித்தோம். ஆனால், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வந்த பிறகு, எவ்வளவு செலவு செய்கிறோம், வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் மீதம் உள்ளது என்பதுகூட தெரியாமல் சிலர் செலவு செய்யும் அளவுக்கு மாறிவிட்டது. இந்த டிஜிட்டல் யுகத்தின் அசுர வளர்ச்சி, மக்களின் பண மேலாண்மையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
 
இந்த நிலையில் ஆகஸ்ட் 1 முதல் புதிய விதிகள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு அமல்படுத்தப்பட உள்ளது.  அதன்படி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் போன்பே, ஜிபே, பீம் போன்ற செயலிகளுக்கு, ஆகஸ்ட் 1 முதல் சில புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளன. 
 
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைப்படி, இனி ஒவ்வொரு பண பரிமாற்றத்துக்கு பிறகும், ஒரு வங்கி கணக்கில் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை வங்கிகள் பயனர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
இந்த விதிமுறை, பயனர்கள் தங்கள் பண இருப்பை அறிந்து, பொறுப்புடன் செலவு செய்ய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் வெளிப்படைத்தன்மையையும், நிதி மேலாண்மையையும் மேம்படுத்தும் ஒரு முக்கியமான படியாகும்.

Edited by Mahendran