முதலமைச்சர் நிவாரண நிதியாக நேற்று உதயநிதியிடம் கொடுத்தவர்கள் விவரம்!
சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி அவர்களிடம் தினந்தோறும் பலர் முதலமைச்சர் நிவாரண நிதியாக வழங்கி வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நேற்று முதலமைச்சர் நிவாரண நிதியாக உதயநிதியிடம் நிதி கொடுத்தவர்கள் கொடுத்த விவரத்தை அவரே தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதியைச் சேர்ந்த Dr.கோகுல் அவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொதுநிவாரண நிதிக்கும், கழக இளைஞரணியின் அறக்கட்டளைக்கும் தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலைகளை நேற்று என்னிடம் வழங்கினார். அவருக்கு நன்றி
திருவாரூரைச் சேர்ந்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் கூடுதல் பதிவாளர் Dr.S.செல்லதுரை அவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த மங்களம் & கோ உரிமையாளர் சகோதரர் முகமது நியாஸ் அவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.21 ஆயிரத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.