1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. A private website for cm relief fund

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு புதிய இணையதளம் பெயர் அறிவிப்பு!

நிவாரண நிதி
தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி அளிக்க விரும்புபவர்கள் இணையதளத்தின் மூலம் நிதி அளிக்கலாம் என்று சற்று முன்னர் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்து இருந்தார்
 
அதன்படி சற்று முன்னர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான புதிய இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்த இணைய தளத்தின் முகவரி https://cmprf.tn.gov.in ஆகும் 
 
இந்த இணையதளத்தின் மூலம் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கலாம் என்பதும் யார் யார் எவ்வளவு நிதி வழங்கி இருந்தார்கள் என்பது குறித்த விவரங்களும் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
திமுக ஆட்சி தோன்றுவதற்கு முன்னர் அதாவது மே 6-ஆம் தேதிக்கு முன்னர் உள்ள நிதிகள் தனி கணக்காகவும் மே 7ஆம் தேதிக்கு பின்னர் உள்ள நிதி விபரங்கள் தனி கணக்காகவும் இருக்கும் என நிதியமைச்சர் குறிப்பிட்டிருந்தார்
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்தபடும்: அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்