1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (16:41 IST)

அடிமையாகவும் இருக்கணும், முதுகெலும்பு முளைச்ச மாதிரியும் நடிக்கணும்: உதயநிதி கிண்டல்!

மத்திய அரசு அமல்படுத்திய வேளாண் சட்ட மசோதா சமீபத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது அதற்கு அதிமுக எம்பிக்கள் ஆதரவளித்து ஓட்டு போட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திடீரென இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தற்போது இன்று மாநிலங்களவையில் இதே மசோதா தாக்கல் செய்யப்படும் போது அதிமுக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 
 
மக்களவையில் ஆதரித்துவிட்டு மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:ம்
 
வேளாண் மசோதாவுக்கு மக்களவையில் ஆதரவு தந்த அதிமுக, மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளது. பணம், பதவிக்காக பாஜகவுக்கு அடிமையாகவும் இருக்கணும், தேர்தல் வர்றதால திடீர்னு முதுகெலும்பு முளைச்ச மாதிரியும் நடிக்கணும். டெலிகேட் பொசிஷன். #விவசாயிகளின்_விரோதி_அதிமுக
 
மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்போது திமுக உள்ளிட்ட எந்த எதிர்க்கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் ஆனால் சிரோமணி அகாலிதளம் எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்தவுடன் தான் திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதா அரசியலை கையில் எடுத்துள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.