செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 31 ஜனவரி 2021 (18:17 IST)

அதிமுக-அமமுக இணைப்பு குறித்து பரிசீலிக்கலாம்: கே பி முனுசாமி

டிடிவி தினகரன் மன்னிப்பு கடிதம் தந்தால் அதிமுக மற்றும் அமமுக இணைப்பு குறித்து பரிசீலனை செய்யலாம் என கேபி முனுசாமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சசிகலா விடுதலைக்குப் பின்னர் அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு இருக்கும் நிலையில் விரைவில் சசிகலா சென்னை திரும்ப உள்ளார். அவர் சென்னை திரும்பியதும் அதிமுகவில் உள்ள பலர் அவரது அணிக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கேபி முனுசாமி அதிமுக பொதுச்செயலாளர் என்றால் அது ஜெயலலிதா மட்டுமே. மற்றவர்கள் சுயநலத்திற்காக சொல்கிறார்கள். அதிமுக உறுப்பினர் அல்லாத சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது என்று கூறினார் 
 
மேலும் டிடிவி தினகரன் மன்னிப்பு கடிதம் தந்தால் அதிமுக மற்றும் அதிமுக இணைப்பு குறித்து பரிசீலனை செய்யலாம் என்றும் அதிமுகவுக்கு எதிராக செய்த துரோகங்களை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரவேண்டும் என்றும் பல்வேறு கோணங்களில் அதிமுகவை கைப்பற்ற டிடிவி தினகரன் முயற்சித்தார் என்றும் கேபி முனுசாமி கூறியுள்ளார். அதிமுகவுடன் இணைய டிடிவி தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்