1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 15 மார்ச் 2021 (10:20 IST)

சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின்… இதுவரை கடந்து வந்த பாதை!

திமுக தலைவரான ஸ்டாலின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

1973 ஆம் ஆண்டு தனது 14 வயதிலேயே அரசியலில் ஈடுபட்ட ஸ்டாலின், மிசா கைதியாக கைதானபோது தமிழக அரசியலில் கவனம் பெற்றார். திமுகவில் இளைஞரணி என்ற ஒன்றை உருவாக்கி அதை இன்று திமுகவின் தூண்களில் ஒன்றாக மாற்றியுள்ளார்.  2021 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கலைஞரின் வாரிசு என சொல்லப்பட்டாலும் 40 ஆண்டுகாலம் அரசியல் பணிகளில் ஈடுபட்ட பின்னரே அவருக்கு முதல்வர் வேட்பாளர் வாய்ப்புக் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தித்த தேர்தல்கள்
1984 தேர்தல்- ஆயிரம் விளக்கு தொகுதி – தோல்வி –
1989 தேர்தல் – ஆயிரம் விளக்கு – வெற்றி
1991 தேர்தல் – ஆயிரம் விளக்கு – வெற்றி
1996 தேர்தல் – ஆயிரம் விளக்கு – வெற்றி
2001 தேர்தல் – ஆயிரம் விளக்கு – வெற்றி
2006 தேர்தல் – ஆயிரம் விளக்கு – வெற்றி
2011 தேர்தல் – கொளத்தூர் – வெற்றி
2016 தேர்தல் – கொளத்தூர் – வெற்றி
சென்னை மேயர்- 1996
2006-2011 துணை முதல்வர்