வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 12 நவம்பர் 2020 (16:13 IST)

உதயநிதி எந்த தொகுதியில் போட்டியிடபோகிறார் தெரியுமா?

திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என கேள்வி எழுப்பபட்டது. 
 
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் விஜய்யின் தந்தை ஆரம்பித்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், அதனை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.
 
அதன் பின்னர் வரும் தேர்தலில் நீங்கள் போட்டியிடும் தொகுதி என்ன என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, வரும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடும் தொகுதி குறித்து  தலைமைதான் முடிவு செய்யும் என்று சொல்லி நகர்ந்தார். இதன் மூலம் அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.