செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 4 ஜூலை 2019 (22:32 IST)

விமர்சனம் செய்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பேன்: உதயநிதி பேட்டி

திமுகவில் பதவி பெற்ற என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் எனது செயல்பாடுகள் இருக்கும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் தலைவர் பொறுப்பை அவரது மகன் முக ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில் தற்போது முக ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவி கிடைத்துள்ளது இதுகுறித்து கட்சிக்குள் மறைமுகமாகவும், வெளியில் வெளிப்படையாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
 
திமுக வாரிசு அரசியலை மையப்படுத்தி செயல்படுவதாகவும், கட்சியின் அடிமட்டத்தில் இருந்து தொண்டு செய்து வந்தவர்களுக்கு எந்தவித பதவியும் கொடுக்காமல், ஸ்டாலின் மகன் என்ற ஒரே தகுதியை வைத்து பதவிகள் பகிரப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தனக்கு கிடைத்த பதவியால் எழுந்து வரும் விமர்சனங்கள் குறித்து கருத்து கூறிய உதயநிதி, 'திமுகவில் நான் எந்த பதவியையும் நான் எதிர்பார்க்கவில்லை. திமுகவில் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்களுக்கான அங்கீகாரமாகவே இந்த பதவியை நான் கருதுகிறேன். வாரிசு அரசியல் என்ற விமர்சனத்திற்கு என்னுடைய செயல்பாடு தக்க பதிலடியாக இருக்கும் என்று இளைஞரணி செயலாளரான பின் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.