ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (18:25 IST)

சோதனையை தொடர்ந்து நடத்துங்கள்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை

திமுக மீதான வருமான வரி சோதனையை தொடர்ந்து நடத்துங்கள் என திமுக தலைவர் முக ஸ்டாலின் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்
 
இன்று காலை முதல் திமுக பிரமுகர்கள் பலரது வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் கடந்த 12 மணி நேரமாக சோதனை நடந்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டவை என்னென்ன என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை
 
இந்த நிலையில் இன்று தேர்தல் பிரசாரம் ஒன்றில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் சோதனையைத் தொடர்ந்து நடத்துங்கள் என்றும் அப்போது தான் திமுக இன்னும் வலுப்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுவரை நடந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சோதனையைத் தொடர்ந்து நடத்துங்கள் என ஸ்டாலின் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது