1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (10:01 IST)

ஊழலில் திளைக்கும் அதிமுக அரசுக்கு தேர்தலில் பதிலடி: உதயநிதி உறுதி!

அதிமுகவின் ஊழல் அடித்தட்டு மக்கள்  மத்தியில் சென்றடைந்து உள்ளது என உதயநிதி ஸ்டாலின் விமர்சனம். 

 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சார பணிகளில் திமுக தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளது. இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையிலிருந்து 100 நாட்கள் தொடர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். 
 
பிரச்சாரத்தின் போது அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில், ரயில்வே  உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வரும் மத்திய அரசு,  தற்போது அவசர அவசரமாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்கள்  மூலம் விவசாயத்தையும், விவசாயிகளையும் கர்ப்பரேட் நிறுவனங்களிடம் அடகு  வைத்துள்ளது. 
 
லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில்  தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக  திமுக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளது. துரைக்கண்ணு என்று பெயர் கூறினாலே மக்கள் 800  கோடி என கூறுகின்றனர். 
 
இந்த அளவிற்கு அதிமுகவின் ஊழல் அடித்தட்டு மக்கள் மத்தியில் சென்றடைந்து உள்ளது. ஊழலில் திளைக்கும் அதிமுக அரசுக்கு வரும்  சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என விமர்சித்துள்ளார்.