வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (18:52 IST)

உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடித்ததே இதற்குத்தான் ! முதல்வர் பழனிசாமி

சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நடக்கவில்லை. அங்கு வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் கொடுத்ததாக தேர்தல் ஆணையம் அங்கு தேர்தலை ரத்து செய்தது.  இதனையடுத்து அண்மையில், வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து தற்போது வேலூர் தொகுதியில் அனைத்து கட்சிகளூம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திமுக - அதிமுக இடையே பலத்த போட்டி நிலவுகிறது. அதிமுக கூட்டணில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக்கட்சி கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகம் அத்தொகுதியில் வேட்பாளராக களமிறங்குகிறார்.  திமுக தரப்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
 
இந்நிலையில் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் இன்று வேலூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஏசி. சண்முகத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்தார்.
அப்போதுஅவர் கூறியதாவது : உதயநிதி திரைப்படங்களில் நடிக்காவிட்டால் அவரை யாருக்கும் தெரியாது. கட்சியில் பதவி பெறவே நான்கு படங்களில் அவர் நடித்தார் என்று தெரிவித்தார்.