திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 12 மே 2020 (15:30 IST)

’’அவர்கள் தான் ’’ நிஜ ஹீரோக்கள் – நடிகர் சூரி புகழாரம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது  கட்டமாக மேலும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரொனா வைரஸ் தாக்கத்தால் அனைத்து தொழில்துறையினரும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில்  தமிழகத்தில் ஒரு சில தொழில்துறையினர் இயங்க பொதுமுடக்கத்தை தளர்த்தி வருகிறது

இந்த நிலையில், நடிகர் சூரி, கொரொனா பரவுகின்ற சூழலில் அய்யனர் போன்று காவல்துறையினர் தான் நிஜ ஹீரோக்கள் என தெரிவித்டுள்ளார்.

இன்று என்னை திருவல்லிக்கேணியில் உள்ள காவல்நிலையத்தில் காவலரகளைச் சந்தித்த நடிகர் சூரி காவலர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் ஆட்டோகிராப் பெற்றுக் கொண்டார். இதையடுத்து,  அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இன்னும் சில நாட்களுக்கு பொதுமக்கள் தனி நபர் இடைவெளியைக் காடைபிடித்து நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.