செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 13 டிசம்பர் 2018 (18:02 IST)

எதுக்கு எதிரி, புடிச்சி கட்சிக்குள்ள போடு.. கருணாநிதி ஸ்டைலில் ஸ்டாலின்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பாணியின் தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். அதாவது, கருணாநிதி தனக்கு யாருடனாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதை அப்படியே விடாமல் சரி செய்து விடுவார். 
 
மேலும், கட்சியை விட்டோ தன்னை விட்டோ யார் பிரிந்து சென்றாலும், அவர்களை கூப்பிட்டு பேசி தன் பக்கம் இழுத்து கொள்வார். இந்த ஃபார்முலாவைதான் தற்போது ஸ்டாலின் பின்பற்றி வருகிறார். 
 
அழகிரி பிரச்சனை செய்த போது பிரிந்து சென்ற கட்சியின் மூத்த நிர்வாகிகளான கருப்பசாமி பாண்டியன், முல்லைவேந்தனை அழைத்து கட்சியில் இணைத்துக்கொண்டார். 
ஆனால், இப்போது எதிர்க்கட்சியில் உள்ளவர்களையும் தன் பக்கம் இழுக்கும் வேலையை பக்காவாக செய்து வருகிறார் ஸ்டாலின். செந்தில் பாலாஜி திமுகவில் இணைவது ஸ்டாலினின்ன் பக்கா  பிளான் என கூறப்படுகிறது. 
 
அடுத்து இந்த லிஸ்டில் கருணாஸ் உள்ளாராம். இதனாலேயே கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கும் கருணாசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்ற கருத்தும் வெளியாகியுள்ளது.