1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahenran
Last Modified: வியாழன், 8 டிசம்பர் 2022 (14:27 IST)

டிரைவர் இல்லாத டாக்சிகளை அறிமுகம் செய்கிறது ஊபர்!

Uber
ஊபர் நிறுவனம் அமெரிக்காவில் டிரைவர் இல்லாத டாக்ஸியை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. 
 
ஓட்டுனர் இன்றி தானாக இயங்கும் டாக்சிகளை முதல் முறையாக அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் என்ற பகுதியில் ஊபர் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 
 
மோஷனல் என்ற தொழில்நுட்ப நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஊபர் நிறுவனம் இந்த டாக்ஸி வடிவமைத்துள்ளது .இந்த டாக்ஸியை 2023ஆம்  ஆண்டு மக்கள் பயன் மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பயணிகளின் பாதுகாப்புக்காக அவர்களது நடவடிக்கை பதிவு செய்யப்படும் என்றும் இது முழுக்க முழுக்க பாதுகாப்பான டாக்ஸி என்றும் ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahenran