1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 10 நவம்பர் 2022 (16:21 IST)

ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா ரிலீஸ் தள்ளிவைப்பு!

தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர், தற்போது நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று டிரைவர் ஜமுனா.

கேப் டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வத்திக்குச்சி படத்தின் இயக்குனர் கின்ஸ்லின் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

இந்த படத்தின் திரையரங்க ரிலீஸ் நவம்பர் 11 ஆம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது ரிலீஸ் தள்ளிவைக்க படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் மறு ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.