வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 அக்டோபர் 2022 (20:36 IST)

டிரைவர் ஜமுனா ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

driver jamuna
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த டிரைவர் ஜமுனா என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது 
 
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையில் உருவாகிய சிங்கிள் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்
 
ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரீரஞ்சனி, ஆடுகளம் நரேன், உள்பட பலரது நடிப்பில் உருவாகி இந்த படத்தை கிங்ஸ்லின் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே வத்திக்குச்சி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் புரமோஷன் பணியையும் படக்குழுவினர் தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran