1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 16 ஜூன் 2024 (08:17 IST)

2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!

தேனி மாவட்டத்தில் இரண்டு வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சித்தார்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் - தமிழ்ச்செல்வி தம்பதிக்கு லத்திகா ஸ்ரீ என்ற இரண்டு வயது பெண் குழந்தையும், 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

 இந்த நிலையில் திடீரென இரண்டு வயது பெண் குழந்தை வாயில் நுரை தள்ளியபடி அழுததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தையின் ரத்தத்தில் சர்க்கரை அளவு 400க்கும் அதிகமாக உள்ளது என்றும் உடனடியாக தேனி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தினர்.

இதனை அடுத்து தேனி மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்தும் பயன் இல்லாமல் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பொதுவாக 40 அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்து வரும் நிலையில் இரண்டு வயது பெண் குழந்தை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva