திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சிவகங்கை , செவ்வாய், 4 ஜூன் 2024 (08:12 IST)

நீரில் மூழ்கி வாய் பேச முடியாத மூன்று வயது பெண் குழந்தை உயிரிழப்பு!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் பகுதியில் வசித்து வரும் ஜவஹர்லால் நேரு மேனகா இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளத,  மூத்த மகன் தர்ஷன் (வயது 10)இரண்டாம் மகன் அதிபன் (வயது 4 வாய்பேசமுடியாது) மூன்றாவது தங்கை கவிதா (வயது3 வாய்பேச முடியாது)  வாய் பேரும் வாய் பேச முடியாது வீ அதிபனும் கவிதாவும் வீட்டின் அருகே உள்ள ஊரணியில் குளிக்கச் சென்றுள்ளனர்,
 
முதலில் மூன்று வயது சிறுமி கவிதா  தண்ணீருக்குள் இறங்கியுள்ளார் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்ததுவுடன் அதைப் பார்த்த வாய் பேச முடியாத அதிபன் தன் அண்ணன் தர்ஷனை அழைக்க வீட்டிற்கு ஓடி உள்ளார், அவரை அழைத்து வந்து சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் தண்ணீருக்குள்  குதித்து அந்த குழந்தையை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு  கொண்டு வந்தனர் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை உயிரிழந்தது பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடலை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது, மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.