வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 23 அக்டோபர் 2017 (18:17 IST)

முதல்வர் முன் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி: சிவகாசியில் பெரும் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். சிவகாசியை மாநகராட்சி ஆக்குவது உள்பட பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த முதல்வர் பின்னர் மேடையை விட்டு இறங்கினார்.




 
 
அப்போது முதல்வரை தொடர்ந்து வந்த இரண்டு பெண்கள் திடீரென முதல்வர் முன் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்த முதல்கட்ட விசாரணையில் பொய் வழக்கில் தனது கணவரை போலீஸார் கைது செய்ததாக கூறி சத்யா என்பவர் உட்பட 2பேர் தீக்குளிக்க முயற்சித்ததாக தெரிய வந்துள்ளது.
 
பின்னர் சத்யா உள்பட இருவரையும் சமாதானப்படுத்திய போலிசார் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.