திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 18 அக்டோபர் 2017 (07:00 IST)

தமிழக முதல்வரை மீண்டும் நேரில் சந்தித்த விஜய்

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் வெளிவருமா? வெளிவராதா? என்ற நிலை நேற்று முன் தினம் வரை இருந்தது.



 
 
இந்த நிலையில் தமிழக முதல்வரை சந்தித்த விஜய், 'மெர்சல்' படத்திற்கு விலங்குகள் நல வாரியம் சான்றிதழ் கொடுக்க மறுத்தது குறித்து ஆலோசனை செய்ததாக தெரிகிறது.
 
முதல்வரின் சந்திப்பிற்கு பின்னர் விலங்குகள் நலவாரியம் 'மெர்சல்' படத்திற்கு இரண்டு கட்'களுடன் சான்றிதழ் கொடுத்தது. எனவே 'மெர்சலுக்கு' ஏற்பட்டிருந்த அனைத்து தடைகளும் நீங்கியது
 
இந்த நிலையில் நேற்றிரவு மீண்டும் முதல்வரை சந்தித்த விஜய், 'மெர்சல்' திரைப்படம் பிரச்சனை இன்றி வெளியாக உதவி செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.