திங்கள், 4 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (18:38 IST)

ஒரே நாளில் ஒரு மாணவர், ஒரு மாணவி தூக்கிலிட்டு தற்கொலை: கலசலிங்கம் பல்கலை.யில் அதிர்ச்சி..!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஒரே நாளில் ஒரு மாணவி மற்றும் ஒரு மாணவர் தூக்கில் தொங்கிய தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகையில்  பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மஞ்சுநாத் என்ற 20 வயது மாணவர் தூக்கில் தொங்கி நேற்று தற்கொலை செய்து கொண்டார்.  
 
அதேபோல் நேற்று பிடெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி அகிலா என்பவரும்  விடுதி அறையில் தூக்கில் தொங்கிய தற்கொலை செய்து கொண்டார். ஒரே நாளில் ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கலசலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Siva