1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 28 மார்ச் 2020 (20:29 IST)

தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 42

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் வரை தமிழகத்தில் மொத்தம் 40 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது
 
சென்னை மேற்கு மாம்பலத்தில் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 
 
அதேபோல் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் என்ற நகரை சேர்ந்த 60 வயது நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து அவர் மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இருவரது உடல் நிலையும் மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது