புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 28 மார்ச் 2020 (20:22 IST)

இலைகள் தான் எங்கள் முகக்கவசம்: தெலுங்கானா பழங்குடி மக்களின் சூப்பர் ஐடியா

இலைகள் தான் எங்கள் முகக்கவசம்: தெலுங்கானா பழங்குடி மக்களின் சூப்பர் ஐடியா
கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக இந்தியாவில் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரஸில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள வீட்டைவிட்டு வெளியே செல்பவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளன. ஆனால் அதே நேரத்தில் மாஸ்க் கடும் கட்டுப்பாடு நிலவி வருவதாகவும் மாஸ்க்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டதாகவும் கூறப்படுகிறதே
 
இந்த நிலையில் தெலுங்கானாவில் உள்ள பழங்குடி மக்கள் சூப்பர் ஐடியா மூலம் மாஸ்க்கை தயாரித்துள்ளனர். தெலுங்கானா பழங்குடி கிராமத்தின் தலைவர் செய்த ஏற்பாட்டின்படி இலைகளால் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தை அவர்கள் அணிந்துள்ளனர். இலைகளால் மிக அருமையாக முகக்கவசத்தை பழங்குடியின மக்கள் அணிந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது
 
இந்த முகக் கவசங்கள் மருத்துவ முகக்கவசங்களுகு இணையாக பாதுகாப்பை அளிக்குமா? என்று தெரியவில்லை. இருப்பினும் அந்த பழங்குடி மக்களின் முயற்சியை பாராட்டிய சமூக ஆர்வலர்கள் அவர்களுக்கு முறையான முகக் கவசங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வருகின்றனர்.