குடிக்க காசு இல்லை… அதற்காக எதைத் திருடியுள்ளார்கள் தெரியுமா இந்த இளைஞர்கள்?

Last Updated: சனி, 19 செப்டம்பர் 2020 (12:13 IST)

மதுரை அருகே குடிக்க காசு இல்லாததால் இரு இளைஞர்கள் அங்கன்வாடி மையத்தின் இரும்பு கேட்டை திருட முயற்சி செய்துள்ளனர்.

உசிலம்பட்டி அருகே சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ்கண்ணன் மற்றும் அய்யம்பட்டியைச் சேர்ந்த வீரணன்
. இவர்கள் இருவரும் மொடாக் குடிகாரர்கள் என்று அந்த பகுதியில் பெயரெடுத்தவர்கள். குடிக்க காசு இல்லாததால் அந்த பகுதி அங்கன்வாடியின் இரும்பு கேட்டை திருடி அதை எடைக்குப் போட்டு குடிக்க முயற்சி செய்துள்ளனர்.

அவர்கள் கேட்டுடன் சின்னப்பூலாம்பட்டி அருகே சென்றபோது, ரோந்து போலீசார் அவர்களை மடக்கி விசாரணை நடத்தியபோது,
உண்மையை உளறியுள்ளனர். இதையடுத்து போலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இதில் மேலும் படிக்கவும் :